சென்னை கிண்டியில் உள்ள சிட்கோவில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், தனது மனைவி பெயருக்கு மாற்றம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது சம்பந்தமாக அரசிடமும் சிட்கோ-விடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, இந்த புகாரை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.