மதுரையை சேர்ந்தவர் முன்னாள் திமுக மண்டல தலைவர் குருசாமி. இவர் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவரென கூறப்படும் நிலையில், பெங்களூர், கம்மனஹள்ளி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் டீ அருந்தியுள்ளார். அப்போது, திடீரென உணவகத்தினுள் புகுந்த கும்பல், குருசாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், குருசாமியை தாக்கியது மதுரையை சேர்ந்த பாண்டியனின் கும்பல் என்பது தெரியவர, இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் பலரை தேடி வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.