அரசியல்

Congress | DMK | "மக்களை சந்திக்க சென்றீர்களா முன்னாள் முதலமைச்சரே?" கணபதி சிவக்குமார்

"மக்களை சந்திக்க சென்றீர்களா முன்னாள் முதலமைச்சரே?" கணபதி சிவக்குமார்

thanthitv

Congress | DMK | "மக்களை சந்திக்க சென்றீர்களா முன்னாள் முதலமைச்சரே?" கணபதி சிவக்குமார்

#Congress #DMK #MKStalin

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எத்தனை முறை நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு தெரிந்துகொண்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் விஜய் மளிகை கடைக்கு சென்று விலைவாசி உயர்வை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துக்கு கணபதி சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியின் போது 45 ரூபாயாக இருந்த அரிசி விலை 75 ரூபாய் வரை உயர்ந்தது குறித்தும், அதற்கு காரணம் நெல் கொள்முதல் விலை உயர்ந்தது மற்றும் ஜி.எஸ்.டி வரி தான் என அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர்கள் விளக்கம் அளித்தது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய், பால் மற்றும் மின்கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்து விலைவாசிகளும் உயர்ந்ததை மறந்துவிட்டு, மக்களை பதற்றப்படுத்தும் பணியை எதிர்க்கட்சி மேற்கொள்வதாக கணபதி சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியின் போது ஸ்டாலின் எத்தனை முறை மளிகை கடைக்கு சென்றார் எனவும், ஒரு நல்ல எதிர்க்கட்சியாகச் செயல்பட மாவட்டச் செயலாளர்களைத் தாண்டி ஸ்டாலின் மக்களை சந்திக்க நேரில் செல்ல வேண்டும் என்றும் கணபதி சிவக்குமார் கடுமையாகச் சாடியுள்ளார்.

BREAKING || "இனி குறைந்த விலைக்கு.." - மக்களின் பெரும் கவலைக்கு அரசு எடுத்த முடிவு

TN Govt | TN Ration Shop | "வரும் ஞாயிறு.. ரேஷன் கடைகள் செயல்படும்" வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

Breaking | CM Vijay | மாஸ் திட்டத்தை வெளியிட்டார் CM விஜய்

Persident Droupadi Murmu | L Murugan | L.முருகன் ராஜினாமாவை ஏற்றார்.. ஜனாதிபதி முர்மு

Rain Alert | Mansoon | Heavy Rain | வங்க கடலில் உருவாகும் சிஸ்டம்.. வெளியான ஹெவி அலர்ட்..