அரசியல்

“நண்பனை இழந்து நிற்கிறேன்" - மறைந்த நடிகர் டெல்லி கணேஷை நினைத்து கலங்கிய அரசியல் தலைவர்கள்..

தந்தி டிவி

மூத்த நடிகர் டெல்லி கணேஷ்,வயது முதிர்வு காரணமாக இரு தினங்களுக்கு முன் வீட்டிலேயே மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 80. சென்னை ராமாவரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை டெல்லி கணேஷ் இல்லத்திற்கு வந்த விமானப்படை அதிகாரிகள், விமானப்படை கொடியை போர்த்தியும் மலர் வளையம் வைத்தும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். இந்திய விமானப்படையில் . 10 ஆண்டுகள் அவர் சேவையாற்றியதை கவுரவிக்கும் வகையில் இந்த மரியாதை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமாவரம் இல்லத்தில் இருந்து நெசப்பாக்கம் மின்மயானம் வரை டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அவரின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டனர். நெசப்பாக்கம் மயானத்தில் குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, டெல்லி கணேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்