அரசியல்

​டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை

டெல்லியில் வரும் 8ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

தந்தி டிவி

டெல்லியில் வரும் 8ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாஜக தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மூத்த அமைச்சர்கள் நிதின்கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், டெல்லி மாநில பாஜக தலைவர் மனோ​ஜ் திவாரி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், கல்லூரி செல்லும் மாணவிக்கு இலவச ஸ்கூட்டியும், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிளும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை, பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் சார்பில் வங்கி கணக்கு தொடங்கி, அவர் 21 வயதை அடைந்தவுடன் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்றும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, கிட்டத்தட்ட தமிழக திட்டங்களை ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்