அரசியல்

"நிச்சயம் இது தேர்தல் அறிக்கையில் இருக்கும்" - அதிமுக உறுதி

தந்தி டிவி

அதிமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக வேலூர் மண்டலம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன், கல்வி சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கம், வணிகர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று மனுக்களாக அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்றார். அதிமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்றும் வீண் போகாது என்றும் அவர் கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்