DailyThanthi | Awareness | தினத்தந்தி நாளிதழின் 'ரீலா, ரியலா?' செய்தி எதிரொலி | 28,000 மாணவர்களுக்கு சமூக வலைதள விழிப்புணர்வு #dailythanthi #awareness #schoolstudents #thanthitv சமூக வலைதளங்களில் பரவும் போலியான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், செய்தித்தாள்கள் வாசிப்பதன் அவசியம் குறித்தும் 28 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி குழுமத்தின் 10 பள்ளிகளில் நடைபெற்ற இந்நிகழ்வில், தினத்தந்தி நாளிதழில் வெளியான 'ரீலா; ரியலா?' எனும் சிறப்பு ஒரு பக்கக் கட்டுரை மிகப்பெரிய கட்-அவுட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்காமல் செய்தித்தாள்களைப் படித்து செய்திகளின் உண்மைத்தன்மையை உணர்ந்துகொள்ள இந்த விழிப்புணர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.