அரசியல்

காங். எம்பி மீது ஊழல் குற்றச்சாட்டு.. ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

தந்தி டிவி

ஒடிசாவில் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு மீதான ஊழல் குற்றச்சாட்டையடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில் வருவான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவை கண்டித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஜே.பி.நட்டா, காங்கிரஸ் கட்சியும் ஊழலும் ஒரே நாணயத்தில் உள்ள இரு பக்கங்கள் என்று விமர்சித்தார். மேலும் தீரஜ் சாஹுவின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பணம் யாருக்கு சொந்தமானது என, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்