அரசியல்

``முடிஞ்சா வந்து பாருங்க’’ - பாஜகவிற்கு திமுக ஓபன் சவால்

``முடிஞ்சா வந்து பாருங்க’’

thanthitv

பாஜகவிற்கு திமுக எம்பி திருச்சி சிவா சவால் தமிழகத்திற்கு பாஜக அத்தனை படையுடன் வந்தாலும், பாஜகவை தோற்கடிப்போம் என நாடாளுமன்றத்தில் திமுக எம் பி திருச்சி சிவா சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அரசின் சாதனைகளையும் திட்ட விளக்கங்களையும் குடியரசுத் தலைவர் தனது உரையில் பேசியதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ஆளுநர்கள் அப்படியே நேர் மாறாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். கோயம்புத்தூர் மதுரையை விட குறைவான மக்கள் தொகை கொண்ட ஹரியானாவின் குருகிராமுக்கு மெட்ரோ அறிவிக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்ட அவர், ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் ஏற்க மறுப்பதால் தமிழகத்திற்கு நிதி மறுப்பது நியாயமா? என்றும் கேள்வி எழுப்பினர். அதோடு கடந்த காலங்களில் தனது பட்ஜெட் உரையை திருக்குறள், புறநானூறு போன்றவை கொண்டு தொடங்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த முறை அதையும் செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்தார்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு