அரசியல்

CM Vijay | முதல்வர் விஜய் பிறந்தநாள் - பிரம்மாண்ட அசைவ விருந்து வைத்த தவெக நிர்வாகி

thanthitv

முதல்வர் விஜய் பிறந்தநாள் - பிரம்மாண்ட அசைவ விருந்து வைத்த தவெக நிர்வாகி முதலமைச்சர் விஜயின் 52-வது பிறந்தநாளை ஒட்டி, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் 5,200 பேருக்கு பிரியாணி விருந்தளித்து தவெகவினர் கொண்டாடினர். அரியலூர் மாவட்ட தவெக பொருளாளர் மரிய டோனி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில், முன்னதாக மேல அகத்தீஸ்வரர் ஆலயத்தில் முதலமைச்சரின் பெயரில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முதலமைச்சரின் முழு உருவப்படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் 52-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 5,200 பொதுமக்களுக்குப் பிரியாணி, இனிப்பு மற்றும் பழங்கள் அடங்கிய பிரம்மாண்ட அசைவ விருந்தினை மாவட்ட பொருளாளர் மரிய டோனி பரிமாறினார். முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி, தவெகவினர் நடத்திய இந்த அசைவ விருந்து, அப்பகுதியில் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்