Isakki Subbiah | "விரைவில் முடிவுக்கு வரும் வழக்கு.. இசக்கி சுப்பையா தேர்தலில் நிற்க முடியாது" - கொதிக்கும் அம்பை இடைத்தேர்தல் களம்
#ambasamudram #byelection #IsakkiSubbiah #TVK #tnpolitics #thanthitv
அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. விக்ரமசிங்கபுரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கடந்த தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக இசக்கி சுப்பையா மீது தொடரப்பட்ட வழக்கு விரைவில் முடிவுக்கு வந்து, அவர் தேர்தலில் போட்டியிடவே தடை விதிக்கப்படும் எனக் காரசாரமாகப் பேசியுள்ளார்.