தனியார் துப்பறியும் நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தச் சட்டத்தை உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்க மத்திய அரசுக்கும், இந்தியச் சட்ட ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருமணத் தகராறு தொடர்பான வழக்கினை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 2007-ல் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா சட்டமாக்கப்படாததைச் சுட்டிக்காட்டி இந்ந உத்தரவை பிறப்பித்துள்ளது.