அரசியல்

"தேர்தலில் படுதோல்வி.. மாநில தலைவரே காரணம்" - பாஜக மாநில செயலாளர் அரை நிர்வாண போராட்டம்

தந்தி டிவி

தேர்தலில் படுதோல்வி.. மாநில தலைவரே காரணம்" - பாஜக மாநில செயலாளர் அரை நிர்வாண போராட்டம்

புதுச்சேரியில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தம்மை பதவி விலக வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டம் நடத்திய மாநில செயலாளரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார் , புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வகணபதி.புதுச்சேரியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நமச்சிவாயம் தோல்வி அடைந்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி பொறுப்பேற்க வேண்டுமென மாநில செயலாளர் ரத்னவேல் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வந்தார். இதன் காரணமாக நேற்று தற்காலிகமாக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நடவடிக்கைக்கு பிறகும் ரத்னவேல் இன்றும் பாஜக அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி வந்ததால், கட்சியின் கட்டுபாட்டை மீறி பங்கம் விளைவிக்கும் வகையில்

செயல்பட்டு வந்த அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கம் செய்வதாக மாநில பாஜக தலைவர் செல்வகணபதி அறிவித்துள்ளார்.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்