உவரி கடற்கரையை தொண்டர்களுடன் தூய்மைப்படுத்திய அண்ணாமலை
நெல்லை மாவட்டம் உவரி கடற்கரையில், 'வி த லீடர்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, தொண்டர்களுடன் இணைந்து கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த தூய்மைப் பிரசாரம், உவரியில் தொடர்ந்த நிலையில், அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், குழந்தைகள் தூய்மையின் அவசியத்தை பள்ளிகளில் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.