அதிமுக உடன் தான் கூட்டணி என பாமக எம்.எல்.ஏ சதாசிவம் அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி வன்னியருக்கு மீண்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவார், அவருடன் தான் கூட்டணி என்று மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில், பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வருங்கால கூட்டணி கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி, வன்னியருக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பெருமை சேர்த்ததாக கூறினார்.