#CMVijay #TNMinisters #MinistersMeeting #TVK #TNPolitics #ThanthiTV
CM Vijay | TN Ministers | இன்று முதல்வர் விஜய் தலைமையில்.. ஒட்டுமொத்தமாக ஒன்றாக கூடும் அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது, அரசு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டமான வெற்றி தமிழகம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.