அரசியல்

AIADMK | Nomination | ஜீப்பில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்

ஜீப்பில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்

thanthitv

ஜீப்பில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் - தாரை தப்பட்டையுடன் டான்ஸ் ஆடி வரவேற்ற தொண்டர்கள் #aiadmk #pollachijayaraman #tnelection2026 #nomination #thanthitv பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். பொள்ளாச்சி அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து தொண்டர்கள் புடைசூழ, ஜிப் வாகனத்தில் நின்றவாறு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபடி அவர் சார் ஆட்சியர் அலுவலகம் வந்தார். வழியில் திரண்டிருந்த ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ண சாமியிடம் தனது வேட்புமனுவை அவர் சமர்ப்பித்தார். பொள்ளாச்சியில் அதிமுகவின் வெற்றி உறுதி எனத் தொண்டர்களிடம் கைகுலுக்கி அவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

BREAKING | TN Assembly | சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம்..ஒரே கோட்டில் நின்ற தவெக, திமுக, அதிமுக..

CM Vijay Sangeetha Divorce Case| பேரவையில் CM விஜய்.. கோர்ட்டில் சங்கீதாவின் ட்விஸ்ட் கோரிக்கை

TN Assembly | Vinoth |"பயிர் காப்பீடு கடந்த ஆண்டைவிட கூடுதல்" பேரவையில் அமைச்சர் வினோத் சொன்ன விஷயம்

ADMK | Edappadi Palanisamy | ஆதரவு கொடுத்த ஈபிஎஸ்

TVK| DMK | ADMK| `ஒரே’ முடிவை எடுத்த திமுக, அதிமுக - தவெக அரசுக்கு மகிழ்ச்சி