அரசியல்

ADMK | தெலுங்கில் பேசி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வாக்கு சேகரிப்பு

தெலுங்கில் பேசி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வாக்கு சேகரிப்பு

thanthitv

#admk #ammanarjunan தெலுங்கில் பேசி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வாக்கு சேகரிப்பு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அம்மன் அர்ஜூனன் பூமார்கெட் பகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் பட்டியலிட்டனர். இதில் குறிப்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாலைகள் முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளதாகவும், சாக்கடை நிறைந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தெலுங்கு மொழியில் குறைகளை தெரிவித்தார். முழுமையாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அம்மன் அர்ஜூனன், தெலுங்கு மொழியிலேயே பேசி அவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்தார். மேலும் தேர்தல் முடிந்ததும் அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்து தரப்படும் என்று கூறி ஆதரவு திரட்டினார். மேலும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

BREAKING || "நாங்கள் ஏன் ராஜினாமா செய்தோம்... அதிமுகவில் நடந்த அந்த பிளான்" - பரபரப்பு பேச்சு

Minister CTR NirmalKumar | TN Politics | "இனி தொடராது.." ஒரே போடாக போட்ட அமைச்சர் CTR

Breaking | Padma Awards | பத்ம விருது பெறும் முன் காலில் விழுந்த நபர் | சட்டென PM மோடி செய்த செயல்

IPS | TN Govt | TN Police | அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு.. IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்

🔴LIVE : Vilathikulam case | CM Vijay | "இரட்டை தூக்கு தண்டனை..."- CM விஜய் வரவேற்பு