அரசியல்

"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

தந்தி டிவி
"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான கூடுதல் வரியை பாஜக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானது என்பதால் அதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்பதே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்றார்.
பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு சென்றால் மாநிலங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானமும் கிடைக்காமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்காமல் தானே மொத்த வரியையும் எடுத்துக் கொள்கிற கூடுதல் வரி விதிப்பு முறையை பெட்ரோல் டீசல் மீது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அனைத்திலும் கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
==============

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி