அமைச்சராக்கும் ராசியை கொண்ட முக்கிய தொகுதி.. அதிமுக கோட்டையை பிடித்த திமுக - இந்த முறை யாருக்கு? #2026ElectionConstituency #dmk #aiadmk #eps #thanthitv நாமக்கல் மாவட்டத்துல ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர், அத்தனூர், ஆர்.புதுப்பட்டி, பட்டணம், பிள்ளாநல்லூர் பேரூராட்சிகள், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஊராட்சியில் இருக்கும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. நாமக்கல் மாவட்டத்துல இருக்கிற 2 தனித் தொகுதிகள்ல ராசிபுரமும் ஒன்று. ராசிபுரம் தொகுதியை பொறுத்தமட்டில்... விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலா இருக்கு. ஜவ்வரிசி உற்பத்தி, கோழி வளர்ப்பு, பட்டு, நெய் உற்பத்தியும் மக்களோட முக்கிய வாழ்வாதாரமா இருக்கு. 2025 டிசம்பர் 19 SIR தரவுபடி தொகுதியில... ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 133 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 679 பெண் வாக்காளர்கள், 13 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 825 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொகுதி வரலாற்றை பொறுத்த வரையில்... அதிமுக அதிமுறை அதாவது 8 முறை ராசிபுரத்துல வெற்றி பெற்றிருக்கு. அதற்கு அடுத்தப்படியாக திமுக 6 முறை வெற்றி பெற்றிருக்கு. காங்கிரஸ் கட்சி 2 முறை வெற்றி பெற்றிருக்கு. அதிமுக தொடங்கப்பட்டதற்கு பிறகு திமுகவும், அதிமுவும் மோதிக்கொள்ளும் தொகுதியாகவே ராசிபுரம் இருக்கு. 2011-ல இங்க போட்டியிட்டு வென்ற தனபாலை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சபாநாயகர் ஆக்குனாங்க. தொகுதியில 2016-ல வெற்றி பெற்ற வி.சரோஜா அமைச்சர் ஆனாங்க. 2021 தேர்தல்ல அமைச்சரா இருந்த சரோஜாவுக்கு எதிராக, திமுகவுல மதிவேந்தன் நிறுத்தப்பட்டாரு. தொகுதியில இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில திமுக வேட்பாளர் மதிவேந்தன் 90 ஆயிரத்து 727 வாக்குகளை பெற்று வெற்றிய தனதாக்குனாரு. 88 ஆயிரத்து 775 வாக்குகளை வாங்கிய சரோஜா வெற்றியை தவறவிட்டாங்க. ஆயிரத்து 952 வாக்குகள் வித்தியாசத்துல வெற்றி பெற்ற மதிவேந்தன் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரா இருக்காரு. விஐபி தொகுதியாக இருக்குற ராசிபுரத்துல, மீண்டும் வெற்றிய வசமாக்க அதிமுக கூட்டணி தீவிரம் காட்ட, சட்டப்பேரவையில பதவியை பெற்றுக் கொடுக்கும் ராசியான தொகுதியாக பார்க்கப்படும் ராசிபுரத்துல யார்... யார் மோதப்போராங்க...? ராசி யாருக்கு அடிக்கப்போகுது என்ற எதிர்பார்ப்பு அதிகரிச்சிருக்கு.