இந்தியா

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா - ஜக்கி வாசுதேவ் பரிந்துரைத்த யோகா

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா - ஜக்கி வாசுதேவ் பரிந்துரைத்த யோகா

தந்தி டிவி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா - ஜக்கி வாசுதேவ் பரிந்துரைத்த யோகா

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஜக்கி வாசுதேவ் பரிந்துரைத்த சிம்ஹா யோகிக் கிரியா எனப்படும் யோகா பயிற்சியை செய்யலாம் என, தனது துறை பணியாளர்களுக்கு, மத்திய வீட்டுவசதி துறை அமைச்சகம் கூறியுள்ளது.சிம்ஹா யோகா கிரியை எனப்படும் யோகா பயிற்சி குறித்த வீடியோவை, ஜக்கி வாசுதேவ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த லிங்க்கை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது.அதில், பெருந்தொற்று அதிகரித்து வரும் இந்த சவாலான காலகட்டத்தில் இந்த யோகா பயிற்சி சுவாச மண்டலத்தை வலிமையாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் தற்போதைய இடர்பாட்டை நேர்மறையான முறையில் நம்மை தயார் படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த யோகா பயிற்சியை மேற்கொள்ள ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் எனவும்,வெறும் வயிற்றில் இந்த யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கார் ஓட்டுநர்கள் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை முறையாகப் படித்து யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு