பாலூட்டும் தாய்மார்கள், வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குழந்தை பிறந்த தாய்மார்கள், குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்துமாறு, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று, கேட்டுக் கொண்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதோடு, அவர்கள் தொடர்ந்து பணியில் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என மத்திய அரசு கூறியுள்ளது..