உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் குடும்பநல நீதிமன்ற வளாகத்தில், குடும்பப் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்காக வந்த பெண், முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாதி பர்கலா பகுதியைச் சேர்ந்த மீனாக்ஷி நகோட்டி என்பவர், கணவருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
அப்போது திடீரென முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் வலது கையில் எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக அவரை மீட்ட போலீசார், டூன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவர் அதிர்ச்சியில் இருப்பதால், இதுவரை முழுமையான வாக்குமூலம் பெற முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது