இந்தியா

சட்டப்பேரவைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு கண்டிப்பாக வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு கண்டிப்பாக வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநில கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்வதாக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூறி வரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 7 பேர் பங்கேற்கவில்லை. இதனால், காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டத் தொடர் முழுவதும் தவறாமல் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முன்னாள் முதலமைச்சரும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா பிறப்பித்துள்ளார்.

Breaking | Padma Awards | பத்ம விருது பெறும் முன் காலில் விழுந்த நபர் | சட்டென PM மோடி செய்த செயல்

IPS | TN Govt | TN Police | அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு.. IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்

🔴LIVE : Vilathikulam case | CM Vijay | "இரட்டை தூக்கு தண்டனை..."- CM விஜய் வரவேற்பு

Breaking | Padma Awards 2026 | கிரிக்கெட் வீராங்கனை கைக்கு வந்த நாட்டின் மிக உயர்ந்த கவுரவம்

BREAKING || யார் யாருக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி? இந்த லிஸ்ட்ட பாருங்க