WhatsApp | UserName | Central Govt | "தடை.." வாட்ஸ்ஆப்க்கு செக் வைத்த மத்திய அரசு.. விதிக்கப்பட்ட கெடு #WhatsApp #UserName #CentralGovt வாட்ஸ் ஆப்பின் 'யூசர்நேம்' (Username) அம்சத்திற்கு மத்திய அரசு தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான யூசர்நேம்களை முன்பதிவு செய்யும் வசதி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த அம்சம் இந்த ஆண்டின் பிற்பகுதியில்தான் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு அமைப்புகள், பிரபலங்கள், பொது ஆளுமைகளின் பெயர்களை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி முடக்கி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையான பெயர்களைப் போன்று போலிப் பெயர்களை உருவாக்குவதும் தடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். வாட்ஸ்ஆப் பயன்படுத்த மொபைல் எண் இன்னமும் கட்டாயம் தேவைப்படும் என்றும், ஒரு கணக்கிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் புதிய நபர்களைத் தொடர்புகொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. முதன்முறையாக ஒரு புதிய நபர் மெசேஜ் அனுப்பினால், அவர் புதிய கணக்கா, ஏற்கனவே தொடர்பில் உள்ளவரா போன்ற எச்சரிக்கை விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும் விளக்கம் அளித்துள்ளது.