Uttarakhand | வேட்டையாட வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை ரூமில் வைத்து பூட்டிய பெண் #Uttarakhand #leopard #viralvideo #thanthitv உத்தரகாண்ட் மாநிலத்தில், வளர்ப்பு நாயை வேட்டையாட வந்த சிறுத்தையை வீட்டின் ஸ்டோர் ரூமுக்குள் பூட்டி வைத்த பெண்ணின் சாமர்த்தியமான செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகேஸ்வர் மாவட்டம் கவாடா கிராமத்தில், இரவு நேரத்தில் விமலா தேவி என்பவர் தனது வளர்ப்பு நாய் இருக்கும் அறைக்குள் ஏதோ நுழைவதை உணர்ந்துள்ளார். அப்போது அறைக்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தமும், சிறுத்தை உறுமும் சத்தமும் கேட்டுள்ளது. இதையடுத்து, தனது மகனுடன் இணைந்து செயல்பட்ட விமலா தேவி, சிறுத்தை உள்ளே இருப்பதை உறுதி செய்து அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டினார். இருப்பினும், அறைக்குள் சிக்கியிருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை அடித்துக் கொன்றது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், சுமார் 13 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையைப் பாதுகாப்பாக மீட்டனர்.