Uttarpradesh | ஆபத்தான ரசாயனங்களை கலந்து போலி மருந்து தயாரிப்பு - தொழிற்சாலையை இழுத்து மூடிய அதிகாரிகள்.. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான போலி ஆக்சிடோசின் ஊசி மருந்து தயாரிப்புத் தொழிற்சாலையை அதிகாரிகள் முற்றுகையிட்டுச் சீல் வைத்தனர். இதில், 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி மருந்து பாட்டில்கள், ஆம்பியூல்கள், திரவ நிலை ஆக்சிடோசின் மற்றும் சீல் வைக்கும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பினையில்(phenyl), உப்பு மற்றும் ஆபத்தான ரசாயனங்களை கலந்து போலி ஊசிகளை தயாரித்ததும், கால்நடைகளிடம் அதிக பால் கறக்கவும், காய்கறிகளை விரைவாக வளர செய்யவும் கள்ளச்சந்தையில் விற்றதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்