இந்தியா

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் : மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற 43 பேர்

மத்திய அமைச்சரவையில் 15 கேபினெட் அமைச்சர்கள் உட்பட 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

தந்தி டிவி

மத்திய அமைச்சரவையில் 15 கேபினெட் அமைச்சர்கள் உட்பட 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில், 43 பேரை மத்திய அமைச்சர்களாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று மாலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். 43 பேரில் 15 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நாராயண் டாட்டூ ராணே, சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ராம் சந்திர பிரசாத் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். இதே போல், அஷ்வினி வைஷ்ணவ், பசுபதி குமார் பராஸ், கிரண் ரிஜிஜூ, ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாகி உள்ளனர். மான்சுக் மாண்ட்வியா, பூபேந்தர் யாதவ், பர்சோத்தம் ரூபாலா, கிஷன் ரெட்டி மற்றும் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோரும் கேபினட் அமைச்சர்கள் ஆவர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்