படுக்கையறைக்கு அடியில் ரகசிய ஆயுதக் கிடங்கு உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், ஒரு வீட்டின் படுக்கையறைக்கு கீழே ரகசியமாகச் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுதக் கிடங்கை காவல்துறையினர் அதிரடியாக கண்டுபிடித்து, 11 பேரை கைது செய்துள்ளனர். மீரட்டில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் சோதனை செய்தபோது, படுக்கையறையில் இருந்த பெரிய கட்டில்களுக்கு அடியில் நிலவறை அமைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்...
இந்த ரகசிய இடத்திலிருந்து 11 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வருண் துபே, ரஜத் சர்மா உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.