இந்தியா

நன்கொடை அளிப்பவர்களுக்கு விஐபி தரிசன அனுமதி - ரூ.10 கோடியில் ஊழியர்களுக்கு பூங்கா

நன்கொடை வழங்கும் பக்தர்களை விஐபி தரிசனத்தில் அனுமதிக்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

திருப்பதியில், செய்தியாளர்களைச் சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோயில் கட்டுவதற்காக தொடங்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படும் என்று கூறினார். தேவஸ்தான ஊழியர்களின் பொழுது போக்கிற்காக 10 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நன்கொடைதாரர்களை எத்தனை பேரை அனுமதிப்பது, ஆன்லைனில் நன்கொடை பெறுவதா, அல்லது நேரடியாக வந்து நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வழங்குவதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி

BREAKING || தமிழகத்தின் புதிய DGP நியமனம் - யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? - மிரட்டல் பின்னணி