பூபால் காலனி வனப்பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்த லாரியை செம்மரக்கடத்தல் தடுப்பு போலீஸார், சோதனை செய்தனர்.
லாரியின் பதிவு எண் போலியாக இருந்ததை அடுத்து, போலீஸார் மறைவான இடத்தில் இருந்து கண்காணித்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெட்டப்பட்ட செம்மரங்களை லாரியில் ஒரு கும்பல் ஏற்றியது.
அவர்களை போலீஸார் சுற்றிவளைக்க முயன்றபோது, செம்மரங்களை போட்டு விட்டு அந்தகும்பல் தப்பியது. இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 140 செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.