இந்தியா

எமனாக பின்னால் வந்து மோதிய கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி - உறைய வைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

எமனாக பின்னால் வந்து மோதிய கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி - கதறிய உறவினர்கள் - உறைய வைக்கும் காட்சிகள்

பெங்களூருவில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் தாறுமாறாக சென்ற கார் ஒன்று, சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி பின்னர், பாதசாரிகள் மூன்று பேர் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரகு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அவர்களது உறவினரான வாசு என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, காரில் இருந்தவர்களில் இருவர் தப்பியோடிய நிலையில், ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் அந்நபரின் பெயர் ஆகாஷ் என்பதும், அவர் பஞ்சாயத்து உறுப்பினரின் மகன் என்பதும் தெரிய வந்தது. எனினும் அந்நபர் மதுபோதையில் இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தப்பிச் சென்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்