ஆட்டம் பாட்டத்துடன் காளை உடல் அடக்கம்
வேடசந்தூர் அருகே தங்கம்மாபட்டி கிராமத்தில் அல்லிமுத்து கோவில் காளை நேற்று உயிரிழந்தது.தகவலறிந்த சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் காளை உடலை குளிப்பாட்டி,பொட்டு வைத்து இறுதி சடங்குகள் செய்தனர். பின்னர் ஆட்டம் பாட்டத்துடன் காளையின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.