இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ள இந்த மணல் சிற்பத்தில், குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வாசகங்களுடன், இலங்கைக்கு ஆதரவாக நிற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் இங்கு, அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.