இந்தியா

"சித்து, சன்னி இருவருமே கட்சியின் முகம்" - காங். செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா பேட்டி

"சித்து, சன்னி இருவருமே கட்சியின் முகம்" - காங். செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா பேட்டி

தந்தி டிவி
"சித்து, சன்னி இருவருமே கட்சியின் முகம்" - காங். செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா பேட்டி

2022-ல் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சித்து மற்றும் சன்னி இருவருமே கட்சியின் முகமாக இருப்பார்கள் என, ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்த அவர்,சித்துவுடன் திறமை வாய்ந்த அனைத்து மூத்த தலைவர்களும் கட்சியின் முகமாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத், தற்போதைய சூழலில் மிகவும் பிரபலமானவராக இருக்கும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்துவின் தலைமையின் கீழ் முதல்வர் சன்னி தலைமையிலான அமைச்சரவை தேர்தலை சந்திக்கும் என கருத்து கூறியிருந்தார். இந்த கருத்து கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இருவருமே கட்சியின் முகமாக இருப்பார்கள் என, ரந்தீப் சுர்ஜேவாலா பேட்டியளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி