கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 4 பேரைக் கொன்ற சக்கக்கொம்பன் காட்டு யானைக்கு இன்று ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சின்னக்கானல் – சாந்தன்பாறை பகுதிகளில் சுற்றித்திரியும் சக்கக்கொம்பன் யானையை தேடும் பணி நடைபெற்று வருகிறது. யானை இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டதும் மயக்க ஊசி செலுத்தி, சுமார் 5 கிலோ எடையுள்ள ரேடியோ காலர் பொருத்தப்பட உள்ளது. இதற்காக விக்ரம், பரத் ஆகிய இரண்டு கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன. ரேடியோ காலர் பொருத்திய பிறகு யானையின் நடமாட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். யானையை வேறு பகுதிக்கு மாற்றாமல், அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கவே வனத்துறை திட்டமிட்டுள்ளது.