இந்தியா

Sabarimala | பக்தர்களால் நிரம்பி வழிந்த சபரிமலை - மொத்தமாக மாறிய காட்சி

பக்தர்களால் நிரம்பி வழிந்த சபரிமலை - மொத்தமாக மாறிய காட்சி

thanthitv

#Sabarimala #LordAyyappa #Kerala #Devotional #ThanthiTV Sabarimala | பக்தர்களால் நிரம்பி வழிந்த சபரிமலை - மொத்தமாக மாறிய காட்சி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால், சன்னிதானத்தில் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்தனர். நடை திறந்த சிறிது நேரத்திலேயே பக்தர்களின் வருகை அதிகரித்து நடைப்பந்தல் முழுவதும் நிரம்பி வழிந்தது. மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி 59 ஆயிரத்து 37 பக்தர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில், இரவு நடை அடைக்கும் வரை ஸ்பாட் புக்கிங் மூலம் வந்த 4 ஆயிரத்து 184 பேர் உட்பட, ஒரே நாளில் மொத்தம் 70 ஆயிரத்து 104 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல காலத்தின் தொடக்கத்தில் பக்தர்கள் வருகை குறைவாக இருந்த நிலையில், தற்போது கூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. தேவஸ்வம் வாரியமும் காவல்துறையும் இணைந்து பக்தர்களைக் கட்டம் கட்டமாக அனுமதிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால், நீண்ட நேர நெரிசல் இன்றி பக்தர்கள் சுமுகமாக தரிசனம் செய்து வருகின்றனர்.

Heavy Rain | Sewerage | ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை - அதற்கே சாக்கடையான சாலைகள்

Tiger | Minister VanniArasu | அமைச்சர் வன்னிஅரசு புலியை துரத்திய விவகாரம் - வழக்கு தாக்கல்

Department of Health தண்ணீர் பாட்டில் விவகாரம் லட்சங்களில் அபராதம். அதிரடியில் இறங்கிய சுகாதாரத்துறை

BREAKING || தி.குன்றம் மலை விவகாரம் - "ஆதாரங்கள்" கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு

Alagiri | TN Police | தாக்குதல் விவகாரம்.. அழகிரி மகள் புகார் - பேங்க் மேனேஜருக்கு பறந்து உத்தரவு