இந்தியா

ரிசர்வ் வங்கி அமலாக்கும் "பாஸிட்டிவ் பே" - வரும் புத்தாண்டு முதல் அதிரடி நடைமுறை

காசோலை மோசடிகளை தடுக்க, வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பாஸிட்டிவ் பே என்ற புதிய பாதுகாப்பு முறையை ரிசர்வ் வங்கி அமல்படுத்த உள்ளது.

தந்தி டிவி

பாஸிட்டிவ் பே என்ற புதிய முறையில், 50 ஆயிரம் ரூபாய்க்கும்

அதிகமான காசோலையை வழங்கும் நபர், அதை பற்றிய சில அடிப்படை தகவல்களை வங்கியின் இணைய தளம், குறுஞ்செய்தி, வங்கியின் செயலி அல்லது ஏ.டி.எம் மூலம் தனது வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். காசோலை தேதி, தொகை, பெறுபவரின் பெயர் போன்ற தகவல்களை அளிக்க வேண்டும். இந்த காசோலைகளை பரிவர்த்தனை செய்யும் மையங்கள், எலக்ட்ரானிக் முறையில் வங்கியுடன் சரி பார்த்த பின், அவற்றை அங்கீகரிக்கும். இந்த தகவல்களில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் அவற்றை களைய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் அனைத்து வாடிக்கையாளர்களும் சேர அனுமதி உண்டு என்றாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் காசோலை அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் காசோலை முறைகேடுகள், மோசடிகளை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி