இந்தியா

புதுச்சேரி நிதிநிலை அறிக்கை தாக்கல் - கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.கவினர்

2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க உறுப்பினர்கள், பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து, சட்டப்பேரவை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிதி நெருக்கடி, அரசின் தினசரி செயல்பாடுகளில் ஆளுநரின் தலையீடு, துறைமுக விரிவாக்கம், வீட்டு வரி, மின்கட்டணம் மற்றும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களை திசை திருப்ப புதுச்சேரி அரசு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை கையில் எடுத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்