வணிக சிலிண்டர் தட்டுப்பாடு – புதுச்சேரியில் ஓட்டல்கள் மூடல்? புதுச்சேரியில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள சுமார் 750 ஓட்டல்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பல உணவகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஓட்டல்களில் உணவு வகைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.