இந்தியா

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் வரும் திங்கள் முதல் மக்கள் குறைகளை கேட்கிறார் கிரண்பேடி

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் பொது மக்களிடம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் குறைகளை கேட்கும் நிகழ்வு வரும் திங்கள் முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரி ஆளுநர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு மூலம் மட்டுமே துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்களின் குறைகளை கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக இதற்காக ஆளுநர் மாளிகையின் தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்