புதுச்சேரி மாநிலத்தில் இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் புதிய சேவையை மின்துறை அமைச்சர் கமலகண்ணன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவை மாநில அரசு அலுவலகங்களில் 388 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் செலுத்தாப்படாமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மின்கட்டண பாக்கி வைத்துள்ள தொழிற்சாலை மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு சலுகை காட்டினால் மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமலகண்ணன் கூறினார்.