Telangana | Vinayagar | Police | தெலங்கானாவில் விநாயகர் சிலை கரைப்புக்கு தண்ணீர் கோரி போராட்டம் #Vinayagar #Telangana #Police தெலங்கானா மாநிலம் கரீம்நகரில், விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிந்தகுண்டா கால்வாய் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றனர். தண்ணீர் திறக்கக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.