விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரி நகரின் பல்வேறு பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் வழக்கமான உற்சாகத்துடன் கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டன.
புதுச்சேரியில் சதுர்த்தி அன்று, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட புதுச்சேரி அரசு அனுமதி அளித்திருந்தது. அவ்வாறு வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான சிலைகளை, புதுச்சேரி கடற்கரை சாலை பழைய துறைமுகம் அருகே கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சிலைகள் கரைக்கப்பட்டன. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டனர். முன்னதாக ஒவ்வொரு சிலையுடனும் ஊர்வலமாக செல்ல 25 பேருக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.