இந்தியா

ஜென்ம விரோதிகளை போல கடுமையாக ஒருவரையொருவர் தாக்கிய 4 ரவுடிகள்..போலீசை பார்த்ததும் நண்பர்களாகி தாக்குதல் - அப்பாவி போலீசார்களுக்கு நேர்ந்த கதி

தந்தி டிவி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட குண்டரை பகுதியில் போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலால் பெரும் பரபரப்பு நிலவியது...பூஜப்புரா கோயில் அருகே 4 ரவுடிகள் இரு தரப்பாக தங்களுக்குள் மோதி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது... விரைந்து சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சித்த போது இரு தரப்பு ரவுடிகளும் சேர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்... இதனால் போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது... ரவுடிகளில் சிலர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், போலீசார் சந்து நாயர், அபிலாஷ் ஆகியோரை கைது செய்தனர்... காவலர்கள் சிலர் காயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்...

Hormuz Strait | India``இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு வெற்றி’’ - ஹார்முஸ் ஜலசந்தியில் வழிவிடும் ஈரான்

Breaking | Diesel | Govt Bus | ``டீசல் தட்டுப்பாடா..?'' | அரசு போக்குவரத்து கழகம் பரபரப்பு விளக்கம்

Breaking | Thoothukudi Incident | +2 மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் | அதிரடி நடவடிக்கை

Breaking | Chennai Crime | அக்காவின் காதலன் செய்த அசிங்கம் | பள்ளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Thoothukudi தூத்துக்குடி +2 மாணவி பலாத்கார கொலை - சிசிடிவியை கையில் எடுத்து தீவிரம் காட்டும் போலீஸ்