சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் - சென்னை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்
சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தி மண்டபம் பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தொடங்கி வைத்தார். அப்போது சிசிடிவி கேமரா பொருத்துவதன் முக்கியத்துவம் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை போலீசார் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கினர்.