இந்தியா

"பெரும் பாவம்... வெட்கித் தலைகுனிய வைக்கிறது.." - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாவம் ஒவ்வொருவரையும் வெட்கி தலை குனிய வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், ரூபாய் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, பாராசட் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியானதால், இந்தியா கூட்டணி கட்சிகள் பதற்றத்தில் இருப்பதாக கூறினார்.

மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் ஏழைகள், பட்டியலின மற்றும் பழங்குடியின சகோதரிகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கொடுமைகளை இழைத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள், அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைப்பதாகவும், ஆனால் அதுபற்றி திரிணமூல் காங்கிரஸ் கவலைப்படவில்லை என்றும் கூறினார். திரிணமூல் காங்கிரஸ் அரசால், ஒருபோதும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை