அணு ஆயுத கடத்தலின் மையமாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அதிபர் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அணுசக்தி தொடர்பான ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கை பாகிஸ்தான் வரலாற்றில் ஒத்துப்போவதாகவும், இதனை பலமுறை இந்தியா சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.