ஓமலூர் அருகே சின்னத்திருப்பதி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் சின்னத்திருப்பதி வாரச்சந்தை மழை பெய்தால் சேறும் சகதியுமாக வாடிக்கையாளர்களை முகம் சுழிக்க வைக்கிறது.விரைவில் மேற்கூரைகள், தரைதளம் அமைத்து தரவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.