இந்தியா

Kashmir | காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

தந்தி டிவி

காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்களைத் தடுக்க, தேசிய புலனாய்வு அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் 32 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தியுள்ளது. தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஜம்மு & காஷ்மீர், காஷ்மீர் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. இவை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, அல்-பத்ர் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி, ஆயுதங்கள், போதைப்பொருட்கள் ஆகியவற்றை திரட்டி விநியோகித்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ட்ரோன்கள் வழியாக காஷ்மீரில் ஆயுதங்கள் வந்துள்ளதும், சமூக ஊடகங்கள் பயங்கரவாதத்தை பரப்புவதற்கும் பயன்படுத்தப்படுவதும் தெரிய வந்துள்ளது. 2 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்